Tuesday, December 23, 2014

‘‘எனது இந்த நிலைமைக்குக் காரணம் சல்மான்தான்!’’ - நன்றி மறக்காத சன்னி லியோன்!

‘கூகுள் தேடலில் பிரதமர் மோடியை முந்திய சன்னி லியோன் இப்போது ரொம்பவும் ஹேப்பி அண்ணாச்சி! அதைவிட, சன்னியால் சல்மான்கான் வெரி ஹேப்பி அண்ணாச்சி!

என்னாச்சு?

இப்படி ‘பிக் பாஸ் சீஸன் 5’ விழாவில், சன்னி இப்படிச் சொன்னார்: ‘‘என் வாழ்நாள் கனவு சல்மானுடன் சேர்ந்து நடிப்பதே! நிச்சயம் அந்த ஒரு நாள் வரும்!’’ என்று அனைவரின் முன்னிலையிலும் சொன்னதில், சல்மானும் உற்சாகமானது நாம் அறிந்ததே.

‘‘பாலிவுட்டில் சல்மான்கானால் முன்னுக்கு வந்த நடிகைகள் எத்தனையோ பேர். கேத்ரினா கைஃப், சோனாக்ஷி சின்ஹா என்று பல நடிகைகள் சல்மான் இல்லையென்றால், வெளிஉலகுக்குத் தெரிந்திருக்க மாட்டார்கள்.

அதேபோல்தான் நானும். எனது பாலிவுட்டில் முதல் படமான ‘ஜிஸ்ம்2’-க்கு முன்பு 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் என்னைப் பங்கு பெற வைத்ததே சல்மான்தான். அப்போது என் தலையில் கைவைத்து அவர் சொன்னார். ‘நீ பாலிவுட்டில் மிகப் பெரிய ஆளாக வருவாய்’ என்று. அதுபோலவே இப்போது நான் பாலிவுட்டின் முக்கிய நடிகைகளில் ஒருத்தியாகி விட்டேன்.

எனது இந்த நிலைமைக்குக் காரணம் சல்மான்தான். என்றாவது ஒரு நாளாவது சல்மானுடன் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்பதுதான் என் ஆசை. அந்த நாள் நிச்சயம் என் வாழ்நாளில் வரும்! அதுவரையில் உங்கள் படங்களை மட்டும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன்!’’ என்று செம ஃபீலிங்கில் பேசி இருக்கிறார்.

இதனால், ‘சல்மான் கானின் அடுத்த படத்தில் சன்னி லியோன் புக் ஆகிடுவாரோ’ என்று பாலிவுட்டில் சக நடிகைகள் காதில் புகை கிளம்ப ஆரம்பித்திருக்கிறதாம்.

தனது ‘கூகுள் தேடல்’ வெற்றியைப் பற்றிப் பேசும்போது, ‘‘மக்கள் என் மீதும் என்னுடைய திறமை மீதும் ஆர்வமாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த வருடமும் கூகுள் தேடலில் என் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள கடுமையாகப் போராடுவேன்!’’ என்று சபதமும் எடுத்திருக்கிறார்.

ஃபேஸ்கட்ல சுருக்கம் விழாம இருக்குற வரைக்கும், மார்க்கெட் உங்களுக்குத்தான் அம்மணி! பயபுள்ளைக பைத்தியமா தேடியிருக்காய்ங்களே உங்கள..


- தமிழ்

No comments:

Post a Comment