Tuesday, December 23, 2014

சி.சி.எல்.லிருந்து விலகல் ஏன்? - விஷால் விளக்கம்

திரை நட்சத்திரங்கள் பங்குபெறும் செலிபிரடி கிரிக்கெட் லீக் தொடரின் சென்னை அணியின் கேப்டன் பதவியிலிருந்து நடிகர் விஷால் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, நடிகர் விஷால் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தீபாவளி பண்டிகையையொட்டி வெளியான பூஜை படம், வெற்றிப்படமாக அமைந்தது. வசூலிலும் முன்னிலை வகித்தது. இதனையடுத்து, படங்களில் தான் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டுள்ளேன். தனது ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு, ஆண்டுக்கு 2 படங்களை தர முடிவு செய்துள்ளேன். பொங்கலுக்கு, ஆம்பள படத்தை வெளியிடும் பணிகளில், படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் தற்போது இத்தாலியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விரைவில் துவங்க உள்ள செலிபிரிட்டி சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் தான் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, சி.சி.எல்.லிருந்து விலகுவதாக அவர் கூறியுள்ளார்.

சென்னை ரினோஸ் அணியின் கேப்டனாக இருந்த விஷால், தற்போது விலகியுள்ளதையடுத்து, கேப்டனாக ஜீவா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment