ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தே.மு.தி.க.வின் எம்.எல்.ஏ ஒருவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 7.4.2013 அன்று நடந்த தே.மு.தி.க பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க.வின் சட்டமன்ற கொறடாவும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சந்திரகுமார் கலந்து கொண்டு பேசினார்.
அவர், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அரசு வக்கீல் ஞானசேகர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 30.10.2014 அன்று வந்தது. அப்போது சந்திரகுமார் எம்.எல்.ஏ நேரில் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி 23.12.2014 அன்று ஒத்திவைத்தார், அதன்படி நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஆனால் அப்போது சந்திரகுமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதால், பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment