மும்பை நகரத்தில் சம்பா என்னும் 70 வயது பாட்டி தனது 4 பேரக்குழந்தைகளுடன், ரயில் நிலையத்தின் அருகே வாழ்ந்து கொண்டிருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பா, தனது மகள், மருமகன் மற்றும் 2 பேரன், 2 பேத்திகளுடன் குடிசையில் வாழ்ந்து வந்தார். உடல்நிலை குறைவால் மகள் இறந்ததையடுத்து, மருமகன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனால் தனது 4 பேரக்குழந்தைகளுடன் அந்த குடிசையை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டது.
இரவு நேரத்தில் நடைபாதையில் தூங்கி கொள்வார்கள். ஒரு முறை மட்டுமே உணவு கிடைக்கும், அதுவும் சிறிதளவு தான் கிடைக்கும்.
சமூக சேவகர் ஒருவர் அந்த பாட்டியிடம் அரசு தங்குமிடத்திற்கு வரும்படி கேட்டுள்ளார், ஆனால் அதற்கு அந்த பாட்டி மறுத்துவிட்டார்.
வீடற்ற பெண்கள் தங்கும் விடுதியில் தங்கினால், தனது பேரக்குழந்தைகள் பிச்சை எடுக்கும் நிலைமை ஏற்பட்டு விடும், அவர்கள் பள்ளியில் படிப்பதே எனது ஆசை என்று கூறியுள்ளார்.
சாலையில் குழந்தைகள் வைத்து பிச்சை எடுக்கும் சிலர் மத்தியில், வயதான காலத்திலும் குழந்தைகள் வைத்து பிச்சை எடுக்கக்கூடாது என்ற நோக்கத்தில் உள்ளார்.
மேலும் இவரிடம் பணம் கொடுத்தால் வாங்க மறுத்துவிடுகிறார், பிச்சை எடுப்பதை ஒருபொழுதும் ஊக்குவிக்க மாட்டேன் என்று கூறுகிறார்.
மும்பை மாநகரத்தில் உள்ள மக்கள் மனது வைத்தால் இது போன்ற வீடற்ற மக்களுக்கு உதவும் முடிவும் என்று சமூக சேவகர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment