Tuesday, December 23, 2014

அம்மாவோடு சண்டை போட்டதால்… மகளை பலாத்காரம் செய்த கள்ளக்காதலன்

கோவில்பட்டியில் வீட்டில் தனியாக சிறுமியை, தாயின் கள்ளக்காதலன் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் இசக்கி தாய். இவரது மகள் லட்சுமி (12) இவருக்கு ஒரு மகனும் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டதால் இசக்கிதாய் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

அப்போது பிழைப்புக்காக அப்பகுதியில் உள்ள ஒரு தீக்குச்சி கம்பெனிக்கு இசக்கிதாய் வேலைக்கு சென்றார். அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த சிவகாசியை சேர்ந்த மணிகண்டன்(28) என்பவருடன் இசக்கிதாய்க்கு பழக்கம் ஏற்பட்டது.

இது நாளடைவில் கள்ள காதலாக மாறியுள்ளது. இருவரும் கணவன்- மனைவி போல வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசக்கி தாய் தனது குழந்தைகள் மற்றும் கள்ளக்காதலனுடன் மீண்டும் கோவில்பட்டியில் உள்ள பாரதியார்நகருக்கு குடிபெயர்ந்தார்.

குடிப்பழக்கம் உடைய மணிகண்டன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து இசக்கிதாயுடன் தகராறு செய்து வந்துள்ளார். மாலை வழக்கம் போல மணிகண்டன் குடிபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனை பார்த்த இசக்கிதாய் அவருடன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். பள்ளி மாணவியான லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் போதை தலைக்கேறிய மணிகண்டன் தனது கள்ளக்காதலியின் மகள் லட்சுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்த மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து கோவில்பட்டி மகளிர் பொலிசில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment