‘லிங்கா’ ஸ்டோரி டிஸ்கஷனுக்கு தினமும் ரஜினி சார் வந்துருவாரு. இங்கதான் உட்கார்ந்து மணிக்கணக்கா பேசுவோம்’ என்கிறார் கே.எஸ்.ரவிகுமார்.
அதற்குள் படம் நஷ்டம். பணத்தை திருப்பிக் கொடுங்க என்று வருகிற தகவலை கேட்டு ஷாக் ஆகியிருக்கும் அவர் அதற்கு சொல்லும் விளக்கமும் பக்கா.
‘ஸார்... ரஜினி படம் எவ்வளவு வியாபாரம் ஆகும்னு தெரிஞ்சுதான் விற்கிறோம். ஆனால் அதை வாங்குகிற நபர்கள் நேரடியாக படத்தை ரிலீஸ் செய்யாமல் அதை சில கோடிகள் லாபம் வச்சு வேறொருத்தருக்கு விற்கிறாங்க. அவரும் சில கோடிகள் வச்சு இன்னொருத்தருக்கு விற்கிறார். இப்படி அஞ்சாறு கை மாறி படம் தியேட்டருக்கு போகுது. படம் வெளியாகி இன்னும் ஒரு வாரம் கூட ஆகல. அதற்குள் நஷ்டம்னு சொல்றதை ஒப்புக்க முடியாது. அதே நேரத்தில் இப்படி கைமாறி கைமாறி போவதாலும்தான் சிக்கல் என்றார். இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கப் போகிறார்களோ?
ஆட்டு வெலையே ஐம்பது ரூவா. அதை அடிச்சு பிரிச்சு வித்தா ஐயாயிரம்னா எப்படிங்க டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்...?

No comments:
Post a Comment