Wednesday, December 24, 2014

நட்ராஜுக்காக காத்திருக்கும் 4 படங்கள்

ஒளிப்பதிவாளர் நட்ராஜ் தமிழ் படங்களில் ஹீரோவாகவும் நடிக்கிறார். மிளகா, சக்கரவியூகம் படங்களில் நடித்த அவர் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் பிரபலமாகி அதன் பிறகு ஒரு பாட்டுக்கு ஆடுகிற அளவிற்கு வளர்ந்தார். தற்போது அவர் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் ஏப்ரல் மாதம் வரை நடக்கும் என்று தெரிகிறது.

அதற்கு இடையில் நட்ராஜ் நடித்து முடித்துள்ள கதம் கதம் படம் வெளிவர இருக்கிறது. அதற்கு பிறகு 3 படங்களில் நடிக்க இருக்கிறார். அதில் ஒன்றை மிளகா படத்தை இயக்கிய ரவிமரியா இயக்குகிறார். தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரகும் கெட்ட பையன்சார் இவன் என்ற படத்தில் நடிக்கிறார். தகடு தகடு இயக்குனரின் அடுத்த படத்திலும் நடிக்க இருக்கிறார். 2015ம் ஆண்டு இறுதிக்குள் குறைந்தபட்சம் 3 படங்களிலாவது நடித்து விடுவது என்று திட்டம் வைத்திருக்கிறார் நட்ராஜ்.

No comments:

Post a Comment