நாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள் எதையும் செய்வோம் என்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்.
மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
அங்கு அவர் பேசியதாவது, மீத்தேன் எடுப்பதற்கு அனுமதி வழங்கிய காங்கிரஸை அப்புறப்படுத்தி விட்டோம். புதிதாக ஆட்சியேற்றிருக்கும் பாஜக அரசு புதுப்பிக்க நினைத்தால் அவர்களையும் அகற்றுவோம்.
அதை விட்டு விட்டு தூய்மை இந்தியா என்று சொல்லிக் கொண்டு ஓட்டு கேட்டு வெற்றி பெற்று விடலாம் எனக் கனவு கண்டு வீதியில் ஓட்டு கேட்டு வந்தால் கழுத்தில் துண்டைப் போட்டு இழுத்து வந்து இங்குள்ள நிலைமையை உணர செய்வோம்.
நாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள், எதையும் செய்ய தயங்க மாட்டோம் எனக் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment